Sunday, April 12, 2009

புதுச்சேரியில் ஈழத்தமிழர்கள் மீது எரிகுண்டு வீசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்திய இராணுவத்தின் நேரடியான ஆதரவோடு ஈழத்தமிழர் மீது இரசாயன குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொடூர படுகொலையை கண்டித்து புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகம் சார்பாக மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் புதுச்சேரி பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு.அய்யப்பன் உணர்ச்சி பெருக்குடன் கண்டன முழக்கமிட்டதுடன் இத்தாலி சோனியாவின் காங்கிரஸை இத்தேர்தலில் இல்லாமல் செய்வதன் மூலம் மீதமுள்ள ஈழத்தமிழர்களையாவது காப்பாற்ற முடியும் என்பதால் வந்திருந்த அனைவரும் காங்கிரஸை வீழ்த்துவதற்கான வேலையை செய்ய வேண்டும் என அனைவரின் காலில் விழுந்து கேட்பதாக கண்ணீர் மல்க கூறினார்.ஆர்பாட்டத்தில் நூற்றுக்கனக்கான பெரியார் தி.க தோழர்களும் ஈழ ஆதரவு தோழமை அமைப்பினரும் கலந்துகொண்டனர்.

Wednesday, February 6, 2008

இந்திய நாடாளுமன்றம் முன் பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

புது தில்லியில் நடந்த ஆர்ப்பாட்டம் பேரணி புகைப்படம்




















...
...
...
...
புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட ஒலிப் பதிவு கீழே





இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தில்லியில் 6-2-2008 புதனன்று பேரணி -ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன்,விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் செ.துரைசாமி, பெரியார் தி.க. புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் சுமார் 700 பேர் கலந்துக் கொண்டனர்.
"இந்திய அரசே! ஈழத் தமிழர்களைக்

கொல்லும் இலங்கைக்கு ஆயுதம் வழங்காதே!"

"எங்கள் இரத்தம், எங்கள் இரத்தம்,

ஈழத் தமிழர் சிந்தும் இரத்தம்"

"தடையை நீக்கு, தடையை நீக்கு,

விடுதலைப் புலிகள் மீதான

தடையை நீக்கு, தடையை நீக்கு"
போன்ற முழக்கங்கள் தில்லியை கலக்கு கலக்கியது.

பேரணி, ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகத்தில் அவரது செயலாளரை நேரில் சந்தித்து தமிழக மக்களிடம் இருந்துப் பெறப்பட்ட 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து அடங்கிய மனுவை அளித்தனர்.ஈழத் விடுதலைப் போரின் நியாயத்தை சர்வ தேச சமுதாயம் உணர்ந்துக் கொள்ள உருவாகும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் வெற்றியாக மாற்றுவோம்.

இந்திய நாடாளுமன்றம் முன் பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்




















இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தில்லியில் 6-2-2008 புதனன்று பேரணி -ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன்,விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் செ.துரைசாமி, பெரியார் தி.க. புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் சுமார் 700 பேர் கலந்துக் கொண்டனர்.
"இந்திய அரசே! ஈழத் தமிழர்களைக்

கொல்லும் இலங்கைக்கு ஆயுதம் வழங்காதே!"

"எங்கள் இரத்தம், எங்கள் இரத்தம்,

ஈழத் தமிழர் சிந்தும் இரத்தம்"

"தடையை நீக்கு, தடையை நீக்கு,

விடுதலைப் புலிகள் மீதான

தடையை நீக்கு, தடையை நீக்கு"
போன்ற முழக்கங்கள் தில்லியை கலக்கு கலக்கியது.

பேரணி, ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகத்தில் அவரது செயலாளரை நேரில் சந்தித்து தமிழக மக்களிடம் இருந்துப் பெறப்பட்ட 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து அடங்கிய மனுவை அளித்தனர்.ஈழத் விடுதலைப் போரின் நியாயத்தை சர்வ தேச சமுதாயம் உணர்ந்துக் கொள்ள உருவாகும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் வெற்றியாக மாற்றுவோம்.

Sunday, February 3, 2008

தில்லியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: புதுச்சேரியில் வழியனுப்பு விழா






பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வரும் 06-02-2008 புதனன்று, காலை 11 மணியளவில், புதுதில்லியில் பாராளுமன்றம் முன்பு ‘இந்திய அரசே! தமிழர்களைக் கொல்லும் இலங்கைக்கு இராணுவ உதவி செய்யாதே’ என வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை அடங்கிய மனுவை மத்திய அரசிடம் கையளிக்கின்றனர்.

இதில், கலந்துக் கொள்வதற்காக புதுச்சேரிலிருந்து பெரியார் தி.க. தோழர்கள் அவ்வமைப்பின் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் 60 பேர், 03-02-2008 ஞாயிறன்று மதியம் 3.00 மணியளைவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டனர். சென்னையிலிருந்து தொடர்வண்டி மூலம் தில்லி செல்கின்றனர்.

புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் சு.பாவாணன், ப.அமுதவன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்கத் தலைவர் நா.மு.தமிழ்மணி, செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் வீ.பார்த்திபன், மக்கள் சிவில் உரிமைக் கழகப் பொறுப்பாளர் மு.முத்துக்கண்ணு, சமூக நீதிப் போராட்டக் குழு பாகூர் அ.மஞ்சினி, இரா.சுகுமாரன், தனித் தமிழ்க் கழகச் செயலாளர் சீனு.அரிமாப்பாண்டியன், அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் சூ.சின்னப்பா உட்பட பல்வேறு கட்சி, அமைப்புத் தலைவர்கள் கலந்துக் கொண்டு வழியனுப்பி வைத்தனர்.

தமிழகத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் இப்போரட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளதாக அவ்வமைப்பின் புதுச்சேரி செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ கூறினார்.

வழியனுப்பு விழாவின் முடிவில் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Saturday, September 29, 2007

இந்து மதவெறி சக்திகளுக்கு சாவு மணி அடித்து சவப்பாடை ஊர்வலம் - படங்கள்

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 28-09-2007 அன்று, புதுச்சேரியில், இராமர் பாலம் என்ற பெயரில் தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான பார்ப்பன, இந்து மதவெறி சக்திகளுக்கு சாவு மணி அடித்து, சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் முடிவில் இந்து மத வெறியன் வேதாந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

ஊர்வலத்திற்கு பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் பா.சக்திவேல், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகரி, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தலைவர் பொ.தாமோதரன், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.மஞ்சினி, வெள்ளையணுக்கள் இயக்கம் சார்பில் பாவல், செம்படுகை நன்னீரகம் செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் தி.க. அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செயலாளர் சு.விசயசங்கர், பொருளாளர் வீரமோகன், துணைத் தலைவர் இரா.வீராசாமி, இளைஞர் அணித் தலைவர் சா.சார்லசு, செயலாளர் செ.சுரேசு, செய்தி தொடர்பாளர் ம.இளங்கோ உட்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

ஊர்வலத்தைத் தடுத்த காவல்துறையினரோடு மோதல் ஏற்பட்டது. காவல்துறை தடுத்தையும் தாண்டி ஊர்வலத்தினர் முன்னேறி வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.















Tuesday, July 17, 2007

புதுவையில் நடிகவேள் எம்.ஆர்.இராதா நூற்றாண்டு விழா















புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத்தலைவர் திரு .லோகு. அய்யப்பன் உரையாற்றுகிறார்.



திரைப்பட இயக்குநர் திரு .சீமான் உரையாற்றிய போது.............

பெரியார் திராவிடர் கழகத்தலைவர் திரு கொளத்தூர் தா.செ.மணி அவர்களின் எழுச்சி உரையின் போது...............

திரளாக கலந்து கொண்ட மக்களின் ஒரு பகுதியினர்..............



தந்தைப் பெரியாரின் உண்மைத் தொண்டராகவும், பகுத்தறிவு கொள்கைகளை நாடகங்கள், திரைப்படங்கள், வாயிலாக பரப்பியவரும் தமிழ்த் திரை உலகின் ஈடு இணையற்ற நடிகருமான நடிகவேள் எம். ஆர், ராதா அவர்களின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 14 சூலை 2007 சனி மாலை அரியாங்குப்பத்தில் புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர்க் கழகம் சார்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பெரியார் திராவிடர்க் கழக துணைத்தலைவர் திரு. இரா. வீராச்சாமி தலைமை ஏற்றார் ஆ. ஆனந்தன், இரா.பெருமாள் முன்னிலை வகித்தனர்.

செ. சுரேசு வரவேற்புரையாற்றினார்.

நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி மாநில பெரியார் திராவிடர்க் கழகத்தலைவர் லோகு. அய்யப்பன் தொடக்க உரை ஆற்றினார்.

பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர். கொளத்தூர். தா. செ. மணி மற்றும், பெரியாரிய கொள்கைப் பற்றாளரும் திரைப்பட இயக்குனருமான சீமான் சிறப்புரையாற்றினாகள்.

பெரியார் திராவிடர்க் கழகத்தின் மாநிலச் செயலாளர் வி. விசைசங்கர், பொருளாளர் வீர மோகன், இளைஞர் அணி அமைப்பாளர் தந்தைப்பிரியன், இளைஞர் அணித் தலைவர் சா. சார்லசு, துணைச் செயலர் கோ. இராசேந்திரன் செய்தித் தொடர்பாளர் ம. இளங்கோ மற்றும் பெரியார் திராவிடர்க் கழகப் பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ச. தீனதயாளன் நன்றி கூறினார்.

எழுச்சிகரமாக நடந்த கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தந்தை பெரியாரின் போர் வாளாக விளங்கிய எம். ஆர். இராதா அவர்களின் ஈடு இணையற்ற தொண்டை போற்றுவோம்.

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் "தமிழகம் முழுவதும் நடிகவேள் எம். ஆர். இராதா அவர்களின் நூற்றாண்டு விழா நடத்தப்படும்" என்று இக்கூட்டத்தில் அறிவித்தார்.