Wednesday, February 6, 2008

இந்திய நாடாளுமன்றம் முன் பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்




















இந்திய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தில்லியில் 6-2-2008 புதனன்று பேரணி -ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன்,விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் செ.துரைசாமி, பெரியார் தி.க. புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் சுமார் 700 பேர் கலந்துக் கொண்டனர்.
"இந்திய அரசே! ஈழத் தமிழர்களைக்

கொல்லும் இலங்கைக்கு ஆயுதம் வழங்காதே!"

"எங்கள் இரத்தம், எங்கள் இரத்தம்,

ஈழத் தமிழர் சிந்தும் இரத்தம்"

"தடையை நீக்கு, தடையை நீக்கு,

விடுதலைப் புலிகள் மீதான

தடையை நீக்கு, தடையை நீக்கு"
போன்ற முழக்கங்கள் தில்லியை கலக்கு கலக்கியது.

பேரணி, ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகத்தில் அவரது செயலாளரை நேரில் சந்தித்து தமிழக மக்களிடம் இருந்துப் பெறப்பட்ட 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து அடங்கிய மனுவை அளித்தனர்.ஈழத் விடுதலைப் போரின் நியாயத்தை சர்வ தேச சமுதாயம் உணர்ந்துக் கொள்ள உருவாகும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் வெற்றியாக மாற்றுவோம்.

1 comment:

Anonymous said...

உங்கள் பதிவிற்கு நன்றி